Monday, March 28, 2011

சொற்றொடர் (Quotations!) - Caste system / சாதி பேசலாமா?

 அந்தப்பண்பாட்டுக்கூறுகள் இல்லையேல் நமக்கு கலைகளும் இலக்கியமும் இல்லை. நமக்கு சுய அடையாளமும் இல்லை. நாம் நவீன முதலாளித்துவம் வடித்தெடுத்த சுத்தமான நுகர்வு இயந்திரங்கள் மட்டுமே.      -jeyamohan.in


சாதிக்கு இரு முகங்கள். ஒன்று அது ஓர் மரபடையாளம். இரண்டு, அது சமூக அடுக்கதிகாரத்தில் ஓர் இடம். இந்த இரு முகங்களில் இரண்டாவதை நவீன யுகத்தில் முழுமையாகவே நிராகரிக்க வேண்டும். ஏனென்றால் அது சென்றகாலத்து பொருளியல் தேவைகளுக்காக, சென்றகால பண்பாட்டுப்புழக்கம் காரணமாக உருவாகி வந்த ஒன்று. முந்தையது அப்படி அல்ல.


சாதியின் அடுக்கதிகாரத்தை கடந்துசெல்ல அவற்றை மறைப்பது ஒரு வழியல்ல. சாதியை உக்கிரமாக பேணுவதற்கான வழி அது. 


சாதியின் அடுக்குமுறை காலப்போக்கில் பொருளிழக்கும்போது பண்பாட்டு நீட்சி என்ற முறையில் அது மேலும் முக்கியத்துவம் பெறும் என்றே நான் நினைக்கிறேன். அவற்றை உணர்ச்சிகள்சார்ந்து ஆராயாமல் அறிவார்ந்து அணுகும் முறை மட்டுமே புதிதாக உருவாகி வரும். அன்று எவரும் சாதிகுறித்து வெட்கவும் மாட்டார்கள் பெருமிதம் கொள்ளவும் மாட்டார்கள்.


for more     -jeyamohan.in 





No comments:

Post a Comment