Wednesday, April 27, 2011

முதலாளித்துவ ஜனநாயகம் என்பது ஒரு மாபெரும் சமநிலை

 இந்த ஜனநாயகத்துக்குப் பதிலாக எங்கெல்லாம் வன்முறைப்போக்கு உள்ளதோ அங்குதான் இன்று நாட்டின் மோசமான வறுமையும் தேக்கநிலையும் நிலவுகிறது. வடகிழக்கு மாநிலங்களும் வங்கமும் உதாரணம். வன்முறை அரசியல் இருந்தபோது இருண்டு தேங்கிக்கிடந்த நிலப்பகுதிகள் அந்த வன்முறையில் இருந்து மீண்டு இந்த ஊழல்மிக்க ஜனநாயகத்துக்கு வந்தபோதே பெரும் வளர்ச்சியைக் கண்டன என்பதும் யதார்த்தம்.
ஆகவே வன்முறை அரசியல் என்பது வறுமைக்கும் தேக்கநிலைக்கும் தீர்வல்ல. அந்த பிரச்சினைகளை அது மேலும் விரைவுபடுத்தவே செய்யும். அந்த மக்களை வன்முறையாளர்களின் அடிமைகளாக்கி வைக்கும். அவர்களின் அரசியல் ஆசைகளும் பொருளியல் இலக்குகளும் கருகிப்போகும்.
காரணம் வன்முறை அரசியல் அந்தமக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து தொடங்கினாலும்கூட அந்த வன்முறைக்கு நிதியளித்து வளர்க்கும் புறச்
சக்திகளின் இச்சைப்படியே இயங்கும். அவர்களுக்கு இந்த மக்களைப்பற்றி உண்மையான அக்கறை ஏதும் இருப்பதில்லை. அவர்களின் நோக்கு உலக ஆதிக்கத்தில் முதன்மைபெறுவது. அதற்காக இந்தியாவைப் பின்னுக்கிழுப்பது


for more  http://www.jeyamohan.in/?p=10845 

Monday, April 25, 2011

பரிணாமம் !!

பழங்குடி பண்பாட்டுச்சிக்கல்
 நன்றி www.jeyamohan.in
 நான் இருபதாண்டுக்காலமாக வடகிழக்குப் பிரச்சினையை கூர்ந்து கவனித்து வருகிறேன். அப்பகுதிகளில் பயணம் செய்திருக்கிறேன். இப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று சொல்லும் அளவுக்கெல்லாம் என்னை அறிவுஜீவியாக நினைத்துக்கொள்ளவில்லை. வடகிழக்கின் பிரச்சினையின் முதல் காரணி வரலாற்று ரீதியானது.

அதாவது பழங்குடி பண்பாட்டுச்சிக்கல். அதில் இருந்து மீள்வது  காலப்போக்கில் அந்த மக்களின் வாழ்க்கைமுறையும் அவர்களின் சிந்தனையும் பழங்குடி இனக்குழு அடையாளங்களில் இருந்து மீண்டு அவர்கள் நவீனத்துவ சமூக அமைப்புக்குள் வருவதைச் சார்ந்தே உள்ளது. நவீன நுகர்வுப்பண்பாடும் ஊழல் அரசியலும் கேளிக்கை ஊடகங்களும் வந்தாலே பெரும்பாலும் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று மணிப்புரி மொழியின் கவிஞரான நண்பர் ஒருமுறை சொன்னார். என்னுள் உள்ள எழுத்தாளனை அதிர்ச்சி அடைய வைத்த கூற்று அது. ஆனால் அவர் மார்க்ஸியர். அவர் சொன்னார், அந்த முதலாளித்துவ சீரழிவுகளை பிறகு சரிசெய்யலாம், ஆனால் அந்த முதலாளித்துவம் எளிதாகப் பரவும். அதன் விளைவாக அது பழங்குடிமனநிலைகளை இல்லாமலாக்கி பகைமைகளையும் பூசல்க்களையும் தடுக்கும். நடைமுறைவாத உண்மையாகக்கூட தோன்றுகிறது

THE PARADOX OF OUR TIMES- Dalai Lama



thankx : http://www.sramakrishnan.com/?p=2254  


we have taller buildings, but shorter tempers

Wider freeways, but narrower viewpoints

We spend more, but we have less

We have bigger houses, but smaller families

More conveniences, but less time

We have more degrees, but less sense

More knowledge, but less judgment

More experts, but more problems

More medicines, but less wellness

We have multiplied our possessions, but reduced our values

We talk too much, love too seldom, and hate too often

We have learnt how to make a living, but not a life

We have added years to life, but not life to years

We’ve been all the way to the moon and back

But have trouble crossing the street to meet the new neighbour

We have conquered outer space, but not inner space

We’ve cleaned up the air, but polluted our soul

We’ve split the atom, but not our prejudice

We’ve higher incomes, but lower morals

We’ve become long on quantity but short on quality

These are the times of tall men, and short character

Steep profits, and shallow relationships

These are the times of world peace, but domestic warfare

More leisure, but less fun; more kinds of food, but less nutrition

These are the days of two incomes, but more divorces

Of fancier houses, but broken homes

It is a time when there is much in the show window

And nothing in the stockroom

A time when technology can bring this letter to you

And a time when you can choose

Either to make a difference…. or just hit, delete.

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்

 

 Jeymohan னின் குறிப்பிடத்தக்க கருத்துக்கள மீண்டும்

சிறு  பகுதி கிழே. முழுவதும் படிக்க கிழுள்ள சுட்டிகளை சுட்டவும் 

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2

http://www.jeyamohan.in/?p=14599      http://www.jeyamohan.in/?p=14597

Ref :   http://en.wikipedia.org/wiki/Irom_Chanu_Sharmila


ஷர்மிளா நடத்துவது வன்முறை இல்லாத போராட்டம் என்பதனாலேயே காந்திய போராட்டம் அல்ல. நான் ஏற்கனவே சொன்னது போல காந்தியப் போராட்டம் என்பது ஒரு அரசையோ அமைப்பையோ கட்டாயப்படுத்துவதோ மிரட்டுவதோ அல்ல. அது மக்களாதரவை திரட்டுவதே.

முதன்மையாக காந்தியப்போராட்டம் என்பது எதிர்மறைப்பண்பு கொண்டது அல்ல, அது நேர்நிலையானது, கட்டியெழுப்பும் தன்மை கொண்டது. நிர்மாணத்திட்டங்களைச் செய்து பார்த்து, நடைமுறையில் அவை என்னென்ன சிக்கல்களுக்கு ஆளாகின்றன என்று அவதானித்து, அந்தச் சிக்கல்களுக்கு எதிராக போராடி அவற்றை களையமுயல்வதே காந்திய வழிமுறை. அதாவது ஒரு சிருஷ்டிகரச் செயலுக்கான தடைகளை களைவதற்காகவே அடிப்படையில் காந்தியப்போராட்டம் தொடங்கப்படுகிறது
இந்திய சுதந்திரப்போராட்டத்தில் குதித்த காந்தி தன் வாழ்நாள் முழுக்க நிர்மாணத் திட்டங்களில் ஈடுபட்டிருந்தார். நடுவே பல வருடங்களை போராட்டங்களை கைவிட்டுவிட்டு நிர்மாணத்திட்டங்களுக்கு மட்டுமாகச் செலவிட்டிருக்கிறார். அதைப்பற்றி ஜவகர்லால் நேரு போன்றவர்களே கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். காந்தியை பொறுத்தவரை உண்மையான பிரச்சினை அதற்கான நடைமுறை தீர்வு இரண்டுமே நிர்மாணச் செயல்பாடுகள் மூலமே கண்டடையப்பட முடியும். மேலும் போராடுவதற்கான அடிப்படையான ஆன்மீக வல்லமையும் அதனூடாகவே கிடைக்கும்.

அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் செய்தது அதையே . குடியிலும் ஊழலிலும் சோம்பலிலும் ஒருங்கிணைவின்மையிலும் மூழ்கி இருந்த ஒரு கிராமசமூகத்தை மீட்டு மறு அமைப்புசெய்ய தன் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டார். அந்த நிர்மாண அனுபவத்தில் இருந்தே அவர் ஊழல் என்ற பிரச்சினையை கண்டு அதற்கு எதிரான தீர்வை நோக்கி வந்தார். 1991ல் ராலேகான் சித்தியில் கிராம நிர்மாண திட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்ட நாற்பது வனத்துறை ஊழியர்களின் ஊழலுக்கு எதிராக போராடியதே தொடக்கம். அதில் அவர் அடைந்த வெற்றியே பின்னர் அடுத்த படி நோக்கி கொண்டு சென்றது.

அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியில் மக்களை திரட்டி செய்த அந்த போராட்டத்தையே அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் விரிவாக்கம் செய்தார். 1997ல் விசைத்தறி ஊழல்களுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்தார். அதன்பின்னர் 1998ல்  நாசிக் நில ஊழலுக்கு எதிரான போராட்டம். தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை அவர் விரிவாக்கம் செய்துகொண்டே இருப்பதைக் காணலாம். ஒரு போராட்டத்தில் பெற்ற அனுபவமே இன்னொரு போராட்டமாக ஆகிறது.

காந்தியப்போராட்டம் என்பது சிறிய அலகுகளாக இலக்குகளை வகுத்துக்கொண்டு அதை அடைந்த பின்னர் அடுத்த இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு முன்னகர்வது. அடைவது ஒவ்வொன்றும் அடுத்த படிக்கான படியாகவே ஆகிறது. காந்தி அவரது போராட்டங்களில் முழுக்க இதை கடைப்பிடித்திருக்கிறார் என்பதைக் காணலாம். அண்ணா ஹசாரே 2000 த்தில் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் தகவல் அறியும் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். அதற்கு மராட்டிய அரசு பணிந்தது.
அந்த போராட்டத்தின் விளைவாக உருவான தகவலறியும் சட்டத்தை மத்திய அரசை ஏற்கச்செய்யும் போராட்டம் மீண்டும் ஆரம்பித்தது.  2005 ல் மத்திய அரசு ஏற்றுக்கொண்ட தகவலறியும் உரிமை சட்டம் [RTI]  இன்று ஊழல் ஒழிப்புக்க்கான மக்கள்போராட்டங்களில் எந்த அளவுக்கு இன்றியமையாத ஆயுதமாக உள்ளது என்பது எவருக்கும் தெரிந்ததே. இதற்கு அடுத்த படியாகவே இன்று லோக்பால் அமைப்புக்கான தேசிய அளவிலான போராட்டத்தை அண்ணா ஹசாரே ஆரம்பித்திருக்கிறார்



அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியில் மக்களை திரட்டி செய்த அந்த போராட்டத்தையே அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் விரிவாக்கம் செய்தார். 1997ல் விசைத்தறி ஊழல்களுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்தார். அதன்பின்னர் 1998ல்  நாசிக் நில ஊழலுக்கு எதிரான போராட்டம். தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை அவர் விரிவாக்கம் செய்துகொண்டே இருப்பதைக் காணலாம். ஒரு போராட்டத்தில் பெற்ற அனுபவமே இன்னொரு போராட்டமாக ஆகிறது.
காந்தியப்போராட்டம் என்பது சிறிய அலகுகளாக இலக்குகளை வகுத்துக்கொண்டு அதை அடைந்த பின்னர் அடுத்த இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு முன்னகர்வது. அடைவது ஒவ்வொன்றும் அடுத்த படிக்கான படியாகவே ஆகிறது. காந்தி அவரது போராட்டங்களில் முழுக்க இதை கடைப்பிடித்திருக்கிறார் என்பதைக் காணலாம். அண்ணா ஹசாரே 2000 த்தில் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் தகவல் அறியும் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். அதற்கு மராட்டிய அரசு பணிந்தது.
அந்த போராட்டத்தின் விளைவாக உருவான தகவலறியும் சட்டத்தை மத்திய அரசை ஏற்கச்செய்யும் போராட்டம் மீண்டும் ஆரம்பித்தது.  2005 ல் மத்திய அரசு ஏற்றுக்கொண்ட தகவலறியும் உரிமை சட்டம் [RTI]  இன்று ஊழல் ஒழிப்புக்க்கான மக்கள்போராட்டங்களில் எந்த அளவுக்கு இன்றியமையாத ஆயுதமாக உள்ளது என்பது எவருக்கும் தெரிந்ததே. இதற்கு அடுத்த படியாகவே இன்று லோக்பால் அமைப்புக்கான தேசிய அளவிலான போராட்டத்தை அண்ணா ஹசாரே ஆரம்பித்திருக்கிறார்



இன்று லோக்பால் அமைப்புக்கான அவரது போராட்டத்தை குறைகூறும் அதே இடதுசாரிகள்தான் அவரால் அடையப்பட்ட தகவலறியும் உரிமைச் சட்டத்தை எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இன்று லோக்பால் என்ன செய்யும் என்று கேட்பவர்கள் நேற்று தகவலுரிமைச் சட்டம் என்ன செய்யும் என்று கேட்டவர்கள்தான். நாளை லோக்பால் நடைமுறைக்கு வந்து அது ஊழலுக்கு எதிரான ஒரு கருவியாக ஆகும்போது அண்ணா ஹசாரே அடுத்த போராட்டத்தில் இருப்பார். இவர்கள் லோக்பால் சட்டத்தை பயன்படுத்தியபடி அண்ணாவை பகடி செய்துகொண்டிருப்பார்கள்.

மீண்டும் வைக்கம் உதாரணம். காந்தி கோரியது அனைத்து சாதியினருக்கும் கோயிலிலும் கோயில்சார்ந்த தெருக்களிலும் நுழையும் உரிமை. ஆனால் முதல் ஒப்பந்தத்தில் கிழக்கு ராஜகோபுர வாசலில் மட்டும் பிறசாதியினர் நுழையக்கூடாது, அது பிராமணர்களுக்கு மட்டும் உள்ள உரிமையாக நீடிக்க வேண்டும் என்ற கோயில் நிர்வாகத்தின் தரப்பை காந்தி ஒத்துக்கொண்டார். வைக்கம் ஆலயச் சாலைகளிலும் ஆலயத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடிந்தது. ஆனால் மறுவருடமே எல்லா வாசல்களிலும் நுழைவதற்காக மீண்டும் போராட்டம் ஆரம்பித்தது.

காந்தி மக்கள் ஆதரவு இல்லாத போது, மக்கள் தன் போராட்டத்தை பிழையாக புரிந்துகொண்டபோது தன் போராட்டங்களை உடனடியாக நிறுத்திக்கொண்டு மறுபரிசீலனைக்கு ஆளாக்கியிருக்கிறார். அப்படி காந்தியப்போராட்டங்கள் கைவிடப்பட்டபோது அவரது சீடர்கள் மனக்கசப்பை அடைந்திருக்கிறார்கள். ஆனால் போராட்டத்தை நடத்துவது மக்கள் , அவர்கள் பங்கேற்க வேண்டும், அவர்கள் அதை முன்னெடுக்க வேண்டும் என காந்தி எப்போதும் கவனம் கொண்டிருந்தார்.


காந்தியப்போராட்டத்தின் மிக முக்கியமான கூறு என்பது போராட்டத்திற்கும் சமரசத்திற்குமான சமநிலைப்புள்ளியே. காந்தி என்றுமே மூர்க்கமான மக்கள் போராட்டங்களை உருவாக்கியதில்லை. ஒருபோராட்டத்தின் அளவும் காலமும் பற்றி அவருக்கு ஒரு கணக்கு இருக்கும். மக்களை முடிவில்லா போராட்டங்களில் தள்ளிவிடுவது மடமை என அவர் அறிந்திருந்தார். மக்கள் குறைவான இழப்புகளுடன் அடைபவற்றையே அவர் உண்மையான வெற்றி என கருதினார். மக்களை இழப்புக்காக அறைகூவிய எல்லா அரசியல்வாதிகளும் அவர்களுக்கு இழப்பை மட்டுமே அளித்துள்ளார்கள் என்பதுதான் வரலாறு

இன்னொன்று, எதை எதிர்த்து போராடுகிறோமோ அது ஒரு அதிகார தரப்பு , எல்லா அதிகாரங்களும் மக்களின் அதிகாரங்களே என்ற புரிதல்.  அந்த அதிகார தரப்பு மீது கொடுக்கும் அழுத்தம் மூலம் அவர்களை ஒரு பேச்சுவார்த்தைக்கு ஒரு சமரசத்துக்கு கொண்டுவரமுடியும் அவ்வளவுதான். அவர்களை முற்றாக தோற்கடித்து தரையில் போட்டு ஏறி அமர்ந்து நம் வெற்றியை கொண்டாட முடியாது. அவர்கள் நம் உரிமையை ஒத்துக்கொள்வதற்காக தங்கள் அதிகாரத்தை கொஞ்சம் விட்டுக்கொடுக்க நேரும்போது அவர்களிடம் நம் கோரிக்கைகளில் சிலவற்றை விட்டுக்கொடுக்க நாமும் முன்வரவேண்டும்.

காந்தியப்போராட்டத்தின் அடுத்த தளம் எங்கே நிர்ப்பந்தத்தை வழங்க வேண்டும் என்பது. ஒரு கருத்து ஒரு சமூகத்தில் ஒருபகுதியினரால் மட்டும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கையில் அத்தனை மக்களுக்கும் அதை கட்டாயமாக ஆக்கும்பொருட்டு ஒரு போராட்டத்தை காந்தி ஒருபோதும் ஆரம்பித்ததில்லை. அவரை பொறுத்தவரை பசுவதையும் மதுவிலக்கும் இரு கண்களைப்போல. ஆனால் அதற்காக அவர் உண்ணாவிரதம் இருந்ததில்லை.
இந்தியாவில் மதுவை முழுமையாக தடைசெய்ய வேண்டும் என்று கோரி ஒருவர்  உண்ணாவிரதமிருந்து செத்தால் அது காந்திய போராட்டமா என்ன?  அண்ணா ஹசாரே அப்படி ஒரு போராட்டத்தை ஆரம்பித்தால் அதை காந்திய போராட்டம் என்று சொல்லமுடியுமா? அவர் சாவார், அவ்வளவுதான். இன்று இங்கே பெரும்பாலானவர்கள் குடிப்பவர்கள். அவர்களிடம் குடிக்காதீர்கள் என்று கோரும் , அவர்களிடம் மனமாற்றத்தை உருவாக்க முயலும் ஒரு போராட்டத்தை மட்டுமே காந்தியம் முன்வைக்க முடியும்.




ஐரோம் ஷர்மிளாவுடன் மிகச் சரியாக ஒப்பிடப்படவேண்டிய போராட்டம் என்பது இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்தை பிரிப்பதற்காக ஐரிஷ் விடுதலை முன்னணி அரைநூற்றாண்டுக்காலம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நிகழ்த்திய போர்தான்.ஐரிஷ் ரிப்பப்ளிகன் ஆர்மி [ஐஆர்ஏ] உலகின் மிகத்தீவிரமான விடுதலைராணுவங்களில் ஒன்று. ஈவிரக்கமில்லாத கொலைகளையும் குண்டு வெடிப்புகளையும் அது எழுபதுகள் வரைக்கூட செய்திருக்கிறது. 1800 கள் முதலே அயர்லாந்தும் இங்கிலாந்தும் போரிட்டு வந்தாலும் 1919 ல்தான் சரியான அயர்லாந்து விடுதலைப்போராட்டம் ஆரம்பித்தது
பற்பல தலைவர்கள் இறந்தனர். பலமுனைகளில் உள்நாட்டுப்போர் நிகழ்ந்தது. பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். இரண்டு வருட உள்நாட்டுப்போர் பிரிட்டிஷார் வென்றதுடன் நின்றது. ஆனால் மேலும் ஐம்பது வருடம் ஐஆர்ஏ தலைமறைவு இயக்கமாக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடியது. அது செய்த தியாகங்கள் பல


 அரசுகள் உணர்ச்சிகளுக்கு அஞ்சுவதில்லை. மக்கள் சக்திக்கு மட்டுமே அவை அஞ்சும்

அத்தகைய மக்கள் சக்தியை அரசுகள் அஞ்சும். அந்த போராட்டம் வெற்றியை அடையும். அதுதான் காந்தியப்போராட்டம். இங்கே ஏன் ஷர்மிளாவை அரசு பொருட்படுத்தவே இல்லை என்றால் அது ஒரு மக்கள்சக்தியாக ஆகவில்லை என்பதனால்தான்.

ஐரோம் ஷர்மிளா இந்திய அரசின் ராணுவத்தின் அராஜகங்களுக்கு எதிராக போராடுவது நியாயமானதே.  ஆனால் அவர் காந்திய வழிகளை பின்தொடர்கிறார் என்றால் மக்களிடமிருந்து அவர்களுக்கு தேவையான தீர்வை கண்டடைய முயல்வேண்டும்.  அந்த தீர்வை நோக்கி மக்களைக் கொண்டுசெல்லக்கூடியதாக அவரது போராட்டம் இருக்கவேண்டும்





ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம் வெறும் மூர்க்கமான தியாகம் மட்டுமாகவே எஞ்சும்- ஐரீஷ் போராளிகளின் தற்கொலைகள் போல. வரலாற்றில் அது இரக்கமே இல்லாமல் மறக்கவும் படும். ஆனால் ஒரு காந்திய போராட்டத்திற்கு இல்லாத ஒருவகை நேரடியான தீவிரம் இதற்கு உள்ளது. வெறும் சாகச அரசியலை நாடும் இளைஞர்களை கவரும். வாய்ச்சால இதழாளர்களுக்கு ஆவேசமாக எழுத உதவும். அவ்வளவுதான்

ஐரோம் ஷர்மிளாவின் மகத்தான தியாகத்தை மீண்டும் வணங்குகிறேன். ஒரு பொதுநன்மைக்க்காக தன்னை முன்வைக்கும் எவரும் அறத்தின் மானுட வடிவங்களே. அந்த ஆவேசத்துடன் மக்களையும் வரலாற்றையும் புரிந்துகொள்ளும் அரசியல் விவேகமும் கலக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்

Friday, April 22, 2011

Warren Buffett Says about Life ,wealth - right philosophy


“My luck was accentuated by my living in a market system that sometimes produces distorted results, though overall it serves our country well... 

I’ve worked in an economy that rewards someone who saves the lives of others on a battlefield with a medal, rewards a great teacher with thank-you notes from parents, but rewards those who can detect the mispricing of securities with sums reaching into the billions. 

In short, fate’s distribution of long straws is wildly capricious.” .


Warren Buffett

Thursday, April 21, 2011

qUOTES

 “I always noticed that people walking out of restaurants looked happier than those leaving temples. 

Do not destroy “I don’t know”, it’s the engine that powers the quest for knowledge.

Sadguru Jaggi Vasudev


Wednesday, April 20, 2011

அண்ணா ஹசாரே மற்றும் சத்யாக்கிரகம்



அன்னா ஹசாரேயை ஆதரிப்போம்

நான் ஏற்கனவே சொன்னது போல்   -

நமது  ஒட்டுமொத மனசாட்சியின்  ஒரு வடிவமே  அன்னா ஹசாரே என  நான் நினைகிறேன். இந்த நிலையில் இந்தியாவுக்கு இன்னும் பல அன்னா ஹசாரேக்கள் தேவை.  சமுக, பொருளாதார  நிலையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல அடிப்படை  மாற்றம் தேவையே 

அதிலிருந்து சிறு பகுதி மட்டும் கிழே 


 முன்னர் சொன்னதுபோல மக்கள்போராட்டம் என்பது மக்கள்மனநிலையை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டமே. மக்களிடம் ஓங்கி இருக்கும் ஒரு இயல்பே அந்த மக்களின் அரசாங்கத்திலும் பிரதிபலிக்கிறது. மக்களின் பிரதிநிதித்துவமுகமே அரசு. நம் மக்களிடம் ஓங்கியிருக்கும் ஊழலே அரசின் ஊழல். அதை உருவாக்குவதும் அதன் பலியாடுகளும் அவர்களே. அந்த பெரும்பான்மை கருத்தியலுக்கு எதிராக ஒரு ஆக்கபூர்வ சிறுபான்மையின் குரலே மாற்றத்துக்காக எழுகிறது.

அதாவது சத்தியாக்கிரகம் என்பது பெரும்பான்மைக்கு எதிராக சிறுபான்மையின் போராட்டம். அது பெரும்பான்மையின் மனசாட்சியை தீண்டி எழுப்புவதாக, அவர்களிடம் உண்மையை உடைத்துக்காட்டுவதாக மட்டுமே இருக்க முடியும். சாத்வீகமான கருத்தியல் போராக மட்டுமே நிகழ முடியும். 

‘இதெல்லாம் ஒண்ணும் வேலைக்காவாது, கெளம்பி அடிக்க வேண்டியதுதான்’ என்ற வகை பேச்சுகளை நாம் கேட்கிறோம். யார் யாரை அடிப்பது? இங்கே நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேரும் ஏதோ ஒருவகையில் ஊழலுடன் சம்பந்தப்பட்டவர்கள். மிக அடித்தள மக்களில் கூட அமைப்புசார்ந்த ஊழல் இருப்பதை, பெரும்பாலான பஞ்சாயத்துகள் அதன் அடிப்படையில் நிகழ்வதை நானே நேரில் கண்டிருக்கிறேன். ஊழல் இங்கே ஓர் அன்றாட வாழ்க்கைமுறை. அந்த ஊழலுடன் சம்பந்தமே இல்லாமல் வெளியே நிற்பவர்கள் எத்தனைபேர்? அவர்கள் அடிக்கக்  கிளம்பி என்ன செய்யப்போகிறார்கள்? கைப்பிள்ளை கிளம்பிய கணக்காகத்தான் ஆகும்.


சத்யாக்கிரக போராட்டம் என்பது என்ன?


அரசதிகாரம் என்பது தனிமனிதர்களைச் சாராது ஒட்டுமொத்தமாகச் செயல்படும் ஒரு ஆற்றல். புறவயமான ஒரு பொருண்மைச்சக்தி அது. அதற்கு தனிமனித உணர்ச்சிகள் ஏதும் இல்லை. ஆகவெ தனிமனித உணர்ச்சிகளோ நியாயங்களோ அங்கே செல்லுபடியாவதில்லை. அதை எதிர்ப்பதற்கு அதே போன்ற புறவயமான பொருண்மைச்சக்திதான் தேவை.  தனிப்பட்ட உணர்ச்சிகளை கொண்டுபோய் அரசதிகாரத்தின் முன்னால் வைப்பதென்பது முட்டாள்தனம்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் செய்ததுதான் பிரிட்டிஷ் அரசு. உலகப்போரை நடத்தியது அது. அதன்முன் நூறுபேர் சென்று பட்டினி கிடந்தால் அது ஒன்றும் ஆடிப்போய்விடாது. வேறெவரையும் விட திட்டவட்டமாக அதை அறிந்திருந்தவர் காந்தி. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக காந்தி நிகழ்த்திய போராட்டங்கள் எவையும் அந்த வகையான உணர்ச்சிகர போராட்டங்கள் அல்ல.  பிரிட்டிஷாருக்கு எதிராக காந்தி உண்ணாவிரதம் இருக்கவில்லை, இருக்க ஆணையிடவும் இல்லை என்ற உண்மை நம் முன் இருக்கிறது. அவர் உண்ணாவிரதமிருந்தது தன் தரப்பை தொகுத்துக்கொள்ளவும் அதில் இருந்த முரண்பாடுகளை களையவும் தன் பக்கத்து ஆற்றலை திரட்டிக்கொள்ளவும்தான்.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக காந்தி  முன்வைத்த எல்லா போராட்டங்களும் பொருளியல் உள்ளடக்கம் கொண்டவை. பொருளியல் ஆதிக்கம் மூலமே பிரிட்டிஷ் அரசு இங்கே நீடிக்கிறது என அவர் அறிந்திருந்தார். இந்திய மக்களின் பெரும்பான்மை அந்த பொருளியல் சுரண்டலுக்கு அளிக்கும் ஆதரவே அவர்களை நிலைநிறுத்தியிருக்கிறது என அவர் உணர்ந்தார். அந்த மக்களாதரவை படிப்படியாக இல்லாமலாக்குவதற்காகவே அவர் அந்தப் போராட்டங்களை நடத்தினார்

அன்னியப்பொருள் புறக்கணிப்பு, உப்பு காய்ச்சுதல், வரிகொடாமை, ஒத்துழையாமை ஆகியவை இந்திய மக்கள் பிரிட்டிஷ் அரசுக்கு அளித்துவந்த பொருளியல் ஆதரவை இல்லாமலாக்குபவை. அவற்றை பிரிட்டிஷ் அரசு எதிர்கொண்ட முறை மூலம் அவ்வரசின் பொருளியல் உள்நோக்கம் மேலும் மேலும் அம்பலப்பட்டு அது இந்திய குடிமைச்சமூகத்தின் [சிவில் சொசைட்டி] ஆதரவை இழந்தது. அவ்வாறுதான் அது இங்கே நீடிக்கமுடியாத நிலை உருவானது.

அரசின் அதிகாரம் என்பது மக்களின் கூட்டான அங்கீகாரம் மூலம் வருவது. அண்டோனியோ கிராம்ஷியை மேற்கோளாக்கிச் சொல்லப்போனால் அதிகாரம் குடிமைச்சமூகத்தில் கருத்தியல் வடிவில் உறைகிறது. ஆகவே அரசின்அதிகாரத்துக்கு எதிரான போராட்டம் என்பது அந்தச் சமூகத்தின் பொதுக்கருத்தியலுக்கு எதிரான போராட்டமே ஆகும். காந்தி போராடியது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக்கு அங்கீகாரம் கொடுத்திருந்த இந்திய குடிமைச்சமூகத்தின் கருத்தியலுக்கு எதிராகத்தான் . சத்தியாக்கிரக போராட்டம் அதற்கான கருவிதான்.


Sunday, April 10, 2011

அன்னா ஹசாரேயை ஆதரிப்போம்

நமது  ஒட்டுமொத மனசாட்சியின்  ஒரு வடிவமே  அன்னா ஹசாரே என  நான் நினைகிறேன். இந்த நிலையில் இந்தியாவுக்கு இன்னும் பல அன்னா ஹசாரேக்கள் தேவை.  சமுக, பொருளாதார  நிலையில் அடுத்த கட்டத்துக்கு செல்ல அடிப்படை  மாற்றம் தேவையே


இன்னும் விமரசிப்பவர்கள் / ஆர்வமுள்ளவர்கள் கிழ்க்கண்ட சுட்டிகளை பார்க்கவும்
http://www.sramakrishnan.com/?p=2239


http://www.tamilhindu.com/2011/04/anna-hazare-campaign-some-views-some-questions/ 

அன்னா ஹசாரேயை ஆதரிப்போம்

ஊழலுக்கு எதிராக டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ள காந்தியவாதி அன்னா ஹசாரேயை ஆதரிப்போம், இந்தியாவின் ஆன்மா இன்னமும் விழித்துக் கொண்டிருக்கிறது என்பதன் உதாரணம் அன்னா ஹசாரே, அவரது செயல்பாடுகள் காந்திய வழி வந்தவை, அவரது போராட்டத்திற்கு அனைவரும் துணைநிற்போம். ஆதரவுக்குரல் கொடுப்போம்
இன்று அன்னா ஹசாரேயை ஆதரித்து கரூரில் நடைபெற்ற உள்ள அடையாள உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,
அன்னா ஹசாரே பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள இளங்கோ ராமசாமி அனுப்பியுள்ள மின்னஞ்சலை இணைத்திருக்கிறேன்
••
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவு பணியில் சிவில் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரபல சமூக சேவகர் அண்ணா ஹசாரே டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
ஊழல் தடுப்பு மசோதா வரைவு பணியில் முற்றிலும் அரசு அதிகாரிகள் மட்டும் இடம் பெறாமல், சாமான்ய மக்கள் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் 50 விழுக்காடு இடம் அளிக்க வேண்டும் என்று ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் இருந்ததை தொடர்ந்து, தமது கோரிக்கையை வலியுறுத்தி ஹசாரே இன்று டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
யார் இந்த அண்ணா ஹஸாரே!!
உலகில் மிக அதிகமாக செயற்கைநீர்நிலைகள் கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. அத்தனைநீர்நிலைகளையும் உருவாக்கியது நம்மிடமிருந்த கிராமசுயராஜ்ய அமைப்பே. அந்த அமைப்பு அழிந்தபின் அவற்றை பராமரிக்கவே முடியாமல் நம் நாடு திணறுகிறது. ஏனென்றால் சுதந்திரத்தை ஒட்டி கிராமநிர்வாக அமைப்பின் பொருளியல் அதிகாரம் பறிக்கப்பட்டு அது செயலிழக்கவைக்கப்பட்டது. இன்றைய கிராமநிர்வாகம் என்பது அரசு இயந்திரத்தின் கீழ்நிலை அலகாக உள்ளது. ஒரு அடிமட்ட அரசதிகாரியின் அலுவலகமே இன்றைய கிராமநிர்வாக மையமாகும். அதில் பொதுமக்கள் பங்கேற்பே இல்லை. அவர் அந்த மக்களிடம் லஞ்சம் வாங்கும், அவர்களை அடக்கியாளும் ஓர் அதிகாரிதான்.
ஆகவே ஊர்கூடி ஒன்றைச்செய்வதற்கே நம் மக்களுக்கு பழக்கமில்லை.  அதற்கான மனநிலைகளும் தார்மீகக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அழிந்துவிட்ட. ஆனால் எங்கெல்லாம் ஒரு தார்மீக சக்தி உள்ளே புகுந்து அந்த அமைப்பை வெற்றிகரமாக மீண்டும் உருவாக்குகிறதோ அங்கெல்லாம் மகத்தான வெற்றிக்கதைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமகால இந்தியாவிலேயே சிறந்த உதாரணங்கள் பல உள்ளன. பாபுராம் ஹஸாரே [அண்ணா] மகாராஷ்டிரத்தில்  ராலேகான் சித்தி என்ற ஊரில் செய்த புரட்சியைக் குறிப்பிடலாம்
ராலேக்ஜான் சித்தி ஊருக்கு வரும்போது அந்த ஊரின் சமூகமையமாக இருந்த ஆலயத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுகொண்டிருந்தது.  ஊர் எப்படி இருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. பொருளியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அந்தக் கிராமம் பெரும் சரிவில் இருந்தது
மெல்ல மெல்ல அந்தக்கிராமத்தை மீட்டெடுத்தார். முதலில் ஊருக்கு ஒரு சுயநிர்வாக அமைப்பை அவர் உருவாக்கினார். அதை அரசாங்கத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றாக கட்டமைத்தார். அதைக்கொண்டு கிராமத்திற்குத் தேவையான விஷயங்களை அந்த மக்களே செய்துகொள்ள வழியமைத்தார்.
அண்ணா ஹஸாரே ராலேகான் சித்தியில் செய்த நீர் நிர்வாகம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டிருக்கிறது. அவர் புதிய தொழில்நுட்பம் எதையும் கொண்டு வரவில்லை. அந்த நிலப்பகுதிகளில் பலகாலமாக இருந்துவந்த முறைதான் அது. நூறுவருடம் முன்பு வெள்ளைய ஆட்சி பாசனத்தையும் பொதுநிலத்தையும் கையிலெடுத்தபோது அந்தமுறை கைவிடப்பட்டு இந்தியாவெங்கும்  அவர்கள் அமலாக்கிய ஒரேவகையான நீர்நிர்வாக முறை கொண்டுவரப்பட்டது. அது அந்தக்கிராமத்தை அரைப்பாலைநிலமாக ஆக்கியது.
தேவையான அளவுக்கு மழைபெய்யக்கூடிய நிலம் அது. ஆனால் மழை ஒரேசமயம் கொட்டித்தீர்த்துவிடும். அந்த நீரைச் சேர்த்து வைக்க ஆழமில்லாத நூற்றுக்கணக்கான குட்டைகளை உருவாக்கி வைப்பது பழங்கால முறை. தமிழ்நாட்டில் திருப்பத்தூர் தருமபுரி வேலூர் செங்கற்பட்டு பகுதிகளில் இருந்து இன்று அழிக்கப்பட்டுவிட்ட அதே முறை. வெள்ளையர் ஆட்சியில் இந்தக்குட்டைகள் பராமரிப்பில்லாமல் விடப்பட்டன. அண்ணா ஹஸாரே அக்குட்டைகளை மீட்டெடுத்தார். புதிதாக நிறைய குட்டைகளை உருவாக்கினார். சில வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. திட்டமிட்டு அளவோடு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேளாண்மைசெய்ய ஆரம்பித்தார்கள். கிராமத்தின் பசுமை மீண்டு வந்தது
விவசாயத்துடன் இணைத்தே பசு வளார்ப்பு கோழி வளர்ப்பு போன்றவற்றை செய்தார் அண்ணா ஹஸாரே. மெல்ல மெல்ல அக்கிராமம் அதன் முக அடையாளமாக விளங்கிய வறுமையில் இருந்து மேலே வந்தது. அங்கே நிலவிய கடுமையான குடிப்பழக்கத்தையும் தீண்டாமையையும் ஊர்ப்பஞ்சாயத்துக்கள் மூலம் இல்லாமலாக்கினார். ராலேகான் சித்தி ஒரு கிராமத்தில் என்ன சாத்தியம் என்பதற்கான உதாரணமாக இன்று சுட்டிக்காட்டப்படுகிறது. 1997ல் நான் ராலேகான் சித்திக்குச் சென்று அந்த ஊர் வரண்ட சூழலில் ஒரு பசுமைத்தீவாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.
அண்ணா ஹசாரே செய்தது மிக எளிமையான விஷயம்தான். ஒரு கிராமத்தின் பிரச்சினைகள் அந்தக்கிராமத்திற்கே உரியவை. அவற்றுக்கான தீர்வுகளையும் அந்தக் கிராம இயல்பிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். அந்தந்தக் கிராமங்களில் அதற்கான முடிவெடுக்கும் அமைப்பும் செயல்படுத்தும் வசதியும் இருந்தால் மட்டுமே அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவர் கிராமப் பஞ்சாயத்தை உயிர்ப்பிப்பதன் மூலம் அதைச் செய்தார். அதன்மூலம் அந்தமக்கள் மறந்துவிட்டிருந்த ஒரு முறையை திருப்பிக்கொண்டுவந்தார்.
ஆனால் அங்கே இருந்த கிராமப் பஞ்சாயத்தை முழுக்கவே அழித்துவிட்டு அங்கே அரசாங்கத்தின் ஓர் அலகை நிறுவிய நம் இந்திய மைய அரசு அக்கிராமத்தின் எல்லா தனிச்செயல்பாடுகளையும் தடைசெய்கிறது என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். அந்த அதிகார அமைப்பின் ஊழல், பொறுப்பின்மை, தாமதம் அனைத்துடனும் போராடியே அண்ணா ஹஸாரே தன் சாதனையைச் செய்யவேண்டியிருந்தது. ராலேகான் சித்தி தன் தேவைகள் அனைத்தையும் செய்துகொள்வதற்கான முழுச்செலவையும் வரியாக ஏற்கனவே அரசுக்குக் கொடுத்திவிட்டு மேலதிக நிதியாதாரத்தை உருவாக்கி தன் தேவைகளைச் செய்யவேண்டியிருந்தது!
மன்மோஹன் சிங் தாமதம் செய்வதால், உண்ணாவிரதத்தை ஆரம்பித்த அண்ணா ஹஸாரே: லோக்பால் அமைக்கக்கோரி, பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை 05-04-2011 அன்று துவக்கினார்.   உயர்மட்டத்தில் உள்ளவர்களை விசாரிக்க வழி செய்யும், “ஜன லோக்பால்’ அமைக்கக்கோரி, சமூக சேவகர் அன்னா ஹசாரே, மத்திய அரசை வற்புறுத்தி வந்தார். இது குறித்து உண்ணாவிரதம் இருக்க போவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து, ஹசாரேவை அழைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். பிரதமர் உட்பட பெரிய பதவிகளில் இருப்பவர்களின் ஊழலை விசாரிக்க வழி செய்வது லோக்பால் அமைப்பு. மக்களுக்கு இந்த அதிகாரம் கிடைப்பதை ஜனலோக்பால் என்று ஹசாரே அழைக்கிறார். பிரதமர் இதுநாள் வரை லோக்பால் அமைக்க நடவடிக்கை எடுக்காததால், அன்னா ஹசாரே நேற்று தன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார்.
சமூகசேவகருக்கு பலர் ஆதரவு: இந்நிலையில் பலரும் இவருக்கு ஆதரவாக போராட கிளம்பியிருக்கின்றனர். இவருக்கு ஆதரவாக சுவாமி அக்னிவேஷ், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி கிரண்பேடி, மகசசே விருது பெற்ற சந்தீப் பாண்டே ஆகியோரும், உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, காந்தி சமாதிக்கு சென்ற அன்னா ஹசாரே, அங்கு மலரஞ்சலி செலுத்திய பின், “இந்தியா கேட்’ பகுதிக்கு ஜீப்பில் சென்றார். அங்கு ஏராளமானவர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர். அதன் பின் அவர் ஜந்தர் மந்தர் பகுதியில் தன் உண்ணாவிரதத்தை துவக்கினார். அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிக்கும் விதமாக, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத்யாதவ் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்.
லோக்பால் அமைப்பு என்று போராடும் அண்ணா ஹஸாரே: இதனிடையே உண்ணாவிரதப் போராட்டத்தை ஹஸாரே தொடங்கியிருப்பது குறித்து பிரதமர் அலுவலகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக ஹஸாரே அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக பிரதமர் அலுவலகதிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஸாரே மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் பிரதமருக்கு உள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக ஹசாரே குறிப்பிடுகையில், “என் மீது அதிக நம்பிக்கையும் மரியாதையும் வைத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார்.
பின்னர் ஏன் லோக்பால் அமைப்பை உருவாக்க தயங்குகிறார்? ஜன லோக்பால் அமைக்கும் வரை என் போராட்டம் தொடரும்’ என்றார். உண்ணாவிரத போராட்ட துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற சரத்யாதவ் குறிப்பிடுகையில், “சுப்ரீம் கோர்ட், தேர்தல் கமிஷன் போன்றவற்றுக்கு தன்னிச்சையான அதிகாரம் உள்ளது போல், ஊழலை ஒழிக்க சக்தி வாய்ந்த லோக்பால் அமைப்பு இந்த தருணத்தில் தேவை’ என்றார்.
அன்னா ஹசாரேவின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் ஏமாற்றம் அளிப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 72 வயதான ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை ஆதரிப்பதாக பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். மேலும், ஹசாரே கோரிக்கைக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் ஹசாரே உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து, தெருக்களில் நோட்டீஸ் வினியோகித்தனர்.
ஜன் லோக்பால் என்றால் என்ன:
ஜன் லோக்பால் என்ற இந்த மசோதாவின் சூத்ரதாரி கர்நாடகத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுவரும் லோகாயுக்தா அமைப்பின் நிறுவனரும், முன்னாள் உச்சநீதிமன்ற  நீதிபதி சந்தோஷ் ஹெக்டே மற்றும் பிரபல உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ப்ரசாந்த் பூஷன்  போன்றோர் ஆவர். இம்மசோதாவின் நோக்கம், ஜன் லோக்பால் அமைப்பின் மூலம் ஊழல்  புகார்களை உடனுக்குடன் (ஒரு வருடத்தில்) விசாரித்து முடித்து, சம்பத்தப்பட்ட நபருக்கு தண்டனை வாங்கித் தருவது, ஊழலின் மூலம் ஈட்டிய சொத்துக்களை முடக்குவது, போன்றவை ஆகும்.
தவிர, ஊழலில் ஈடுபட்டவர் மந்திரியாகவோ அல்லது முக்கிய அரசாங்க  அதிகாரியாகவோ இருப்பின், அவர் மீது வழக்குத் தொடர அரசாங்க அனுமதி தேவையில்லை  என்பதுவும் இம்மசோதாவின் முக்கிய அம்சமாகும். இம்மசோதாவை பாராளுமன்றத்தில்  ஏற்று நிறைவேற்ற வேண்டுமென்பதுதான் இப்போதைய அன்னா ஹஸாரே தலைமையிலான உண்ணா  நோன்பிருப்பவர்களின் முக்கியக் கோரிக்கை.
ஊழலுக்கெதிராகப் பிறப்பெடுத்துள்ள தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம்
ஏற்கனவே ஊழலை ஒழிக்க லோக்பால் என்ற மசோதாவை பாராளுமன்றத்தில் கொணர்ந்து
நிறைவேற்றியும் உள்ளது. ஆனால் அதிலுள்ள ஓட்டைகளின் காரணமாக அது செயல்படுத்த
முடியாத ஒரு சட்டம் என்பது அதை எதிர்க்கும் ஹஸாரே போன்றோர் கூறும் காரணம்.
அரசாங்கத்தில் லோக்பால் மசோதா மூலம் ஒரு மந்திரியோ அல்லது அரசாங்க அதிகாரி
தொடர்புடைய ஊழலையோ வெளிக் கொணர்ந்து, விசாரித்து தண்டனை பெற்றுத் தர
வேண்டுமானால், பொதுமக்கள் முதலில் லோக்சபா அல்லது ராஜ்யசபாவின் சபாநாயகரிடம்
ஊழல் தொடர்பான புகார் மனுவை அளிக்க வேண்டும். சபாநாயகர் அம்மனுவைப்
பரிசீலித்து, அது ஏற்புடையது என்றால் லோக்பால் கமிட்டிக்கு அனுப்புவார். பின்பு
அது விசாரிக்கப்பட்டு, தண்டனையளிக்கப்படும்.
இயல்பாகவே சபாநாயகர் ஆளுங்கட்சியையோ அல்லது கூட்டணியையோ சார்ந்த நபராக இருப்பதால், ஆளுங்கட்சி அல்லது அதற்கு வேண்டிய அதிகாரி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு சபாநாயகர்  எடுத்துக் கொள்வது சந்தேகமே. அதற்கு மீறி கமிட்டிக்கு அனுப்பப்பட்டாலும் விசாரணை ஆண்டுகள் கணக்கில் எடுத்து, மறக்கப்பட்டு, பொதுமக்களின் பணமும் விசாரணை  என்ற பெயரால் வீணடிக்கப்படும். எனவே அந்த லோக்பால் சட்டம் ஏற்புடையதல்ல என்பதே ஹஸாரே மற்றும் குழுவினரின் வாதம்.
ஜன் லோக்பால் மசோதாவின் அம்சங்கள்:
* மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும், ஒவ்வொரு மாநிலத்திலும் லோகாயுக்தா
அமைப்பும் நிறுவப்படும்.
* உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவ்வமைப்பும் சுதந்திரமான
அமைப்பாகும். இதன் விசாரணையில் அரசாங்கமோ அல்லது அதிகாரிகளின் குறுக்கீடோ
இருக்காது.
* மற்ற வழக்குகள் போல் பல மாமாங்கங்களாக விசாரணை நடைபெறாமல், ஜன் லோக்பால்
அமைப்பின் மூலம் எந்தவொரு வழக்கு விசாரணையும் ஒரு வருடத்தில் முடிக்கப்பட்டு,
அடுத்த ஓராண்டில் வழக்கும் முடிக்கப்பட்டு, இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய
நபருக்கு தண்டனையும் அளிக்கப்பட்டு விடும்.
* ஊழல் மூலம் ஈட்டப்பட்ட, அரசாங்கத்திற்கு நட்டமேற்படுத்தப்பட்ட தொகை
தண்டனைக்காலத்தில் மீட்கப்படும்.
* பொது மக்களுக்கு எந்தவொரு அரசாங்க அலுவலகத்தில் குறிப்பிட்ட பணி முடித்துக்
கொடுக்கப்படா விட்டாலோ அல்லது தாமதப்படுத்தப்பட்டாலோ, தொடர்புடைய அதிகாரிக்கு
அபராதம் விதிக்கப்பட்டு, அவ்வபராதம் மனுதாரருக்கு நிவாரணமாக அளிக்கப்படும்.
* ஆக உங்களுடைய ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்றவை
பெறுவதில் மெத்தனமோ, தாமதமோ ஏற்படுத்தப்பட்டாலோ, நீங்கள் இவ்வமைப்பை அணுகலாம்.
இதன் மூலம் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு அது கிடைப்பதோடு மட்டுமல்லாமல்,
நிவாரணமும் பெற்றுத் தரப்படும். தவிர தரமற்ற சாலைகள், பஞ்சாயத்து அளவில்
நடைபெறும் ஊழல்கள், முறைகேடுகள் போன்றவற்றையும் நீங்கள் இவ்வமைப்பின்
கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம். இரண்டாண்டுகளுக்குள் தொடர்புடைய குற்றவாளி
தண்டனை பெறுவார்.
* லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் அரசாங்கம் மூலம் நியமிக்கப்பட மாட்டார்கள்.
நீதிபதிகள், பொதுமக்கள் போன்றவர்கள் மூலம் மிகவும் வெளிப்படையான நியமனம்
இருக்கும். ஆகவே ஊழல் பேர்வழிகளே ஊழலை ஒழிக்கப் புறப்படும் அவலங்கள்
தவிர்க்கப்படும்.
* ஜன் லோக்பால் உறுப்பினர்களே ஊழல்வாதிகளாக இருப்பின், அவர்கள் மீதான புகார்கள்
உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு,
தண்டனை பெற்றுத் தரப்படுவர்.
* புகார் அளிப்பவர்கள் மற்றும் புகாரில் தொடர்புடையவர்களுக்கு முழு பாதுகாப்பு
அளிக்கப்படும்.
மேற்கண்ட எந்தவொரு அம்சமும் அரசாங்கத்தின் தற்போதைய லோக்பால் மசோதாவில் இல்லை.
இது போன்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, கொண்ட நோக்கில் பழுதின்றி
செயல்பட்டால், நிச்சயம் இந்தியா ஊழலற்ற தேசமாக மாறும் என்பதில் சிறிதளவும்
ஐயமில்லை. தவிர, லோகாயுக்தா அமைப்பு கர்நாடக அமைச்சர்கள் கண்களில் விரலை விட்டு
ஆட்டுவதால், இவ்வமைப்பு நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்து என்பதிலும்
ஐயமில்லை. ஆக இந்தியர்கள் உலகக் கோப்பை வெற்றியை ஒற்றுமையோடு வரவேற்றுக்
கொண்டாடியதைப் போல், ஹஸாரேவின் உண்ணா நோன்பிற்கும் ஆதரவளித்து, அவரது உயர்ந்த நோக்கம் ஈடேற ஆதரவளிப்போம்.
லோக்பால் பற்றி யாரும் அவ்வளவாக பேசுவதில்லை. பேசாமல் லோக்பால் என்பதை
கிரிக்கெட் பால் என்று வைத்தால் பலரும் பேசுவார்கள் என்று நம்புகிறேன். அண்ணா
ஹஸாரே முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். வெற்று பெற்றால் இவர் தான் பாரத ரத்னா!

Wednesday, April 6, 2011

Do you know when wiseman become a stupid


புத்தியுள்ளவன் அடிமுட்டாள் ஆகிறது எங்க தெரியுமா ?
புத்தி இருக்கிறதனாலேயே தான் பெரிய ஆள்னு நெனைக்க ஆரம்பிக்கும்போதுதான் 

 
Do you know when wise man become a stupid , 
when he start thinking  that. he is the best - because of his wisdom

- Jeya mohan 

There are now more slaves on the planet

There are now more slaves on the planet than at any time in human history 

Source : http://cultofthedeadfish.blogspot.com/   

  


Tuesday, April 5, 2011

TV

TV - the Home  made prison
You decide what right and wrong