பழங்குடி பண்பாட்டுச்சிக்கல்
நன்றி www.jeyamohan.in
நான் இருபதாண்டுக்காலமாக வடகிழக்குப் பிரச்சினையை கூர்ந்து கவனித்து வருகிறேன். அப்பகுதிகளில் பயணம் செய்திருக்கிறேன். இப்பிரச்சினைக்கு என்ன தீர்வு என்று சொல்லும் அளவுக்கெல்லாம் என்னை அறிவுஜீவியாக நினைத்துக்கொள்ளவில்லை. வடகிழக்கின் பிரச்சினையின் முதல் காரணி வரலாற்று ரீதியானது.
அதாவது பழங்குடி பண்பாட்டுச்சிக்கல். அதில் இருந்து மீள்வது காலப்போக்கில் அந்த மக்களின் வாழ்க்கைமுறையும் அவர்களின் சிந்தனையும் பழங்குடி இனக்குழு அடையாளங்களில் இருந்து மீண்டு அவர்கள் நவீனத்துவ சமூக அமைப்புக்குள் வருவதைச் சார்ந்தே உள்ளது. நவீன நுகர்வுப்பண்பாடும் ஊழல் அரசியலும் கேளிக்கை ஊடகங்களும் வந்தாலே பெரும்பாலும் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று மணிப்புரி மொழியின் கவிஞரான நண்பர் ஒருமுறை சொன்னார். என்னுள் உள்ள எழுத்தாளனை அதிர்ச்சி அடைய வைத்த கூற்று அது. ஆனால் அவர் மார்க்ஸியர். அவர் சொன்னார், அந்த முதலாளித்துவ சீரழிவுகளை பிறகு சரிசெய்யலாம், ஆனால் அந்த முதலாளித்துவம் எளிதாகப் பரவும். அதன் விளைவாக அது பழங்குடிமனநிலைகளை இல்லாமலாக்கி பகைமைகளையும் பூசல்க்களையும் தடுக்கும். நடைமுறைவாத உண்மையாகக்கூட தோன்றுகிறது

No comments:
Post a Comment