Jeymohan னின் குறிப்பிடத்தக்க கருத்துக்கள மீண்டும்
சிறு பகுதி கிழே. முழுவதும் படிக்க கிழுள்ள சுட்டிகளை சுட்டவும்
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2
http://www.jeyamohan.in/?p=14599 http://www.jeyamohan.in/?p=14597Ref : http://en.wikipedia.org/wiki/Irom_Chanu_Sharmila
ஷர்மிளா நடத்துவது வன்முறை இல்லாத போராட்டம் என்பதனாலேயே காந்திய போராட்டம் அல்ல. நான் ஏற்கனவே சொன்னது போல காந்தியப் போராட்டம் என்பது ஒரு அரசையோ அமைப்பையோ கட்டாயப்படுத்துவதோ மிரட்டுவதோ அல்ல. அது மக்களாதரவை திரட்டுவதே.
முதன்மையாக காந்தியப்போராட்டம் என்பது எதிர்மறைப்பண்பு கொண்டது அல்ல, அது நேர்நிலையானது, கட்டியெழுப்பும் தன்மை கொண்டது. நிர்மாணத்திட்டங்களைச் செய்து பார்த்து, நடைமுறையில் அவை என்னென்ன சிக்கல்களுக்கு ஆளாகின்றன என்று அவதானித்து, அந்தச் சிக்கல்களுக்கு எதிராக போராடி அவற்றை களையமுயல்வதே காந்திய வழிமுறை. அதாவது ஒரு சிருஷ்டிகரச் செயலுக்கான தடைகளை களைவதற்காகவே அடிப்படையில் காந்தியப்போராட்டம் தொடங்கப்படுகிறது
இந்திய சுதந்திரப்போராட்டத்தில் குதித்த காந்தி தன் வாழ்நாள் முழுக்க நிர்மாணத் திட்டங்களில் ஈடுபட்டிருந்தார். நடுவே பல வருடங்களை போராட்டங்களை கைவிட்டுவிட்டு நிர்மாணத்திட்டங்களுக்கு மட்டுமாகச் செலவிட்டிருக்கிறார். அதைப்பற்றி ஜவகர்லால் நேரு போன்றவர்களே கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். காந்தியை பொறுத்தவரை உண்மையான பிரச்சினை அதற்கான நடைமுறை தீர்வு இரண்டுமே நிர்மாணச் செயல்பாடுகள் மூலமே கண்டடையப்பட முடியும். மேலும் போராடுவதற்கான அடிப்படையான ஆன்மீக வல்லமையும் அதனூடாகவே கிடைக்கும்.
அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியிலும் சுற்றுப்புற கிராமங்களிலும் செய்தது அதையே . குடியிலும் ஊழலிலும் சோம்பலிலும் ஒருங்கிணைவின்மையிலும் மூழ்கி இருந்த ஒரு கிராமசமூகத்தை மீட்டு மறு அமைப்புசெய்ய தன் வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டார். அந்த நிர்மாண அனுபவத்தில் இருந்தே அவர் ஊழல் என்ற பிரச்சினையை கண்டு அதற்கு எதிரான தீர்வை நோக்கி வந்தார். 1991ல் ராலேகான் சித்தியில் கிராம நிர்மாண திட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்ட நாற்பது வனத்துறை ஊழியர்களின் ஊழலுக்கு எதிராக போராடியதே தொடக்கம். அதில் அவர் அடைந்த வெற்றியே பின்னர் அடுத்த படி நோக்கி கொண்டு சென்றது.
அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியில் மக்களை திரட்டி செய்த அந்த போராட்டத்தையே அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் விரிவாக்கம் செய்தார். 1997ல் விசைத்தறி ஊழல்களுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்தார். அதன்பின்னர் 1998ல் நாசிக் நில ஊழலுக்கு எதிரான போராட்டம். தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை அவர் விரிவாக்கம் செய்துகொண்டே இருப்பதைக் காணலாம். ஒரு போராட்டத்தில் பெற்ற அனுபவமே இன்னொரு போராட்டமாக ஆகிறது.
காந்தியப்போராட்டம் என்பது சிறிய அலகுகளாக இலக்குகளை வகுத்துக்கொண்டு அதை அடைந்த பின்னர் அடுத்த இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு முன்னகர்வது. அடைவது ஒவ்வொன்றும் அடுத்த படிக்கான படியாகவே ஆகிறது. காந்தி அவரது போராட்டங்களில் முழுக்க இதை கடைப்பிடித்திருக்கிறார் என்பதைக் காணலாம். அண்ணா ஹசாரே 2000 த்தில் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் தகவல் அறியும் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். அதற்கு மராட்டிய அரசு பணிந்தது.
அந்த போராட்டத்தின் விளைவாக உருவான தகவலறியும் சட்டத்தை மத்திய அரசை ஏற்கச்செய்யும் போராட்டம் மீண்டும் ஆரம்பித்தது. 2005 ல் மத்திய அரசு ஏற்றுக்கொண்ட தகவலறியும் உரிமை சட்டம் [RTI] இன்று ஊழல் ஒழிப்புக்க்கான மக்கள்போராட்டங்களில் எந்த அளவுக்கு இன்றியமையாத ஆயுதமாக உள்ளது என்பது எவருக்கும் தெரிந்ததே. இதற்கு அடுத்த படியாகவே இன்று லோக்பால் அமைப்புக்கான தேசிய அளவிலான போராட்டத்தை அண்ணா ஹசாரே ஆரம்பித்திருக்கிறார்
அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியில் மக்களை திரட்டி செய்த அந்த போராட்டத்தையே அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் விரிவாக்கம் செய்தார். 1997ல் விசைத்தறி ஊழல்களுக்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்தார். அதன்பின்னர் 1998ல் நாசிக் நில ஊழலுக்கு எதிரான போராட்டம். தொடர்ச்சியாக இந்த போராட்டத்தை அவர் விரிவாக்கம் செய்துகொண்டே இருப்பதைக் காணலாம். ஒரு போராட்டத்தில் பெற்ற அனுபவமே இன்னொரு போராட்டமாக ஆகிறது.
காந்தியப்போராட்டம் என்பது சிறிய அலகுகளாக இலக்குகளை வகுத்துக்கொண்டு அதை அடைந்த பின்னர் அடுத்த இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு முன்னகர்வது. அடைவது ஒவ்வொன்றும் அடுத்த படிக்கான படியாகவே ஆகிறது. காந்தி அவரது போராட்டங்களில் முழுக்க இதை கடைப்பிடித்திருக்கிறார் என்பதைக் காணலாம். அண்ணா ஹசாரே 2000 த்தில் மகாராஷ்ட்டிர மாநிலத்தில் தகவல் அறியும் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தார். அதற்கு மராட்டிய அரசு பணிந்தது.
அந்த போராட்டத்தின் விளைவாக உருவான தகவலறியும் சட்டத்தை மத்திய அரசை ஏற்கச்செய்யும் போராட்டம் மீண்டும் ஆரம்பித்தது. 2005 ல் மத்திய அரசு ஏற்றுக்கொண்ட தகவலறியும் உரிமை சட்டம் [RTI] இன்று ஊழல் ஒழிப்புக்க்கான மக்கள்போராட்டங்களில் எந்த அளவுக்கு இன்றியமையாத ஆயுதமாக உள்ளது என்பது எவருக்கும் தெரிந்ததே. இதற்கு அடுத்த படியாகவே இன்று லோக்பால் அமைப்புக்கான தேசிய அளவிலான போராட்டத்தை அண்ணா ஹசாரே ஆரம்பித்திருக்கிறார்
இன்று லோக்பால் அமைப்புக்கான அவரது போராட்டத்தை குறைகூறும் அதே இடதுசாரிகள்தான் அவரால் அடையப்பட்ட தகவலறியும் உரிமைச் சட்டத்தை எல்லாவற்றுக்கும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இன்று லோக்பால் என்ன செய்யும் என்று கேட்பவர்கள் நேற்று தகவலுரிமைச் சட்டம் என்ன செய்யும் என்று கேட்டவர்கள்தான். நாளை லோக்பால் நடைமுறைக்கு வந்து அது ஊழலுக்கு எதிரான ஒரு கருவியாக ஆகும்போது அண்ணா ஹசாரே அடுத்த போராட்டத்தில் இருப்பார். இவர்கள் லோக்பால் சட்டத்தை பயன்படுத்தியபடி அண்ணாவை பகடி செய்துகொண்டிருப்பார்கள்.
மீண்டும் வைக்கம் உதாரணம். காந்தி கோரியது அனைத்து சாதியினருக்கும் கோயிலிலும் கோயில்சார்ந்த தெருக்களிலும் நுழையும் உரிமை. ஆனால் முதல் ஒப்பந்தத்தில் கிழக்கு ராஜகோபுர வாசலில் மட்டும் பிறசாதியினர் நுழையக்கூடாது, அது பிராமணர்களுக்கு மட்டும் உள்ள உரிமையாக நீடிக்க வேண்டும் என்ற கோயில் நிர்வாகத்தின் தரப்பை காந்தி ஒத்துக்கொண்டார். வைக்கம் ஆலயச் சாலைகளிலும் ஆலயத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடிந்தது. ஆனால் மறுவருடமே எல்லா வாசல்களிலும் நுழைவதற்காக மீண்டும் போராட்டம் ஆரம்பித்தது.
காந்தி மக்கள் ஆதரவு இல்லாத போது, மக்கள் தன் போராட்டத்தை பிழையாக புரிந்துகொண்டபோது தன் போராட்டங்களை உடனடியாக நிறுத்திக்கொண்டு மறுபரிசீலனைக்கு ஆளாக்கியிருக்கிறார். அப்படி காந்தியப்போராட்டங்கள் கைவிடப்பட்டபோது அவரது சீடர்கள் மனக்கசப்பை அடைந்திருக்கிறார்கள். ஆனால் போராட்டத்தை நடத்துவது மக்கள் , அவர்கள் பங்கேற்க வேண்டும், அவர்கள் அதை முன்னெடுக்க வேண்டும் என காந்தி எப்போதும் கவனம் கொண்டிருந்தார்.
காந்தியப்போராட்டத்தின் மிக முக்கியமான கூறு என்பது போராட்டத்திற்கும் சமரசத்திற்குமான சமநிலைப்புள்ளியே. காந்தி என்றுமே மூர்க்கமான மக்கள் போராட்டங்களை உருவாக்கியதில்லை. ஒருபோராட்டத்தின் அளவும் காலமும் பற்றி அவருக்கு ஒரு கணக்கு இருக்கும். மக்களை முடிவில்லா போராட்டங்களில் தள்ளிவிடுவது மடமை என அவர் அறிந்திருந்தார். மக்கள் குறைவான இழப்புகளுடன் அடைபவற்றையே அவர் உண்மையான வெற்றி என கருதினார். மக்களை இழப்புக்காக அறைகூவிய எல்லா அரசியல்வாதிகளும் அவர்களுக்கு இழப்பை மட்டுமே அளித்துள்ளார்கள் என்பதுதான் வரலாறு
இன்னொன்று, எதை எதிர்த்து போராடுகிறோமோ அது ஒரு அதிகார தரப்பு , எல்லா அதிகாரங்களும் மக்களின் அதிகாரங்களே என்ற புரிதல். அந்த அதிகார தரப்பு மீது கொடுக்கும் அழுத்தம் மூலம் அவர்களை ஒரு பேச்சுவார்த்தைக்கு ஒரு சமரசத்துக்கு கொண்டுவரமுடியும் அவ்வளவுதான். அவர்களை முற்றாக தோற்கடித்து தரையில் போட்டு ஏறி அமர்ந்து நம் வெற்றியை கொண்டாட முடியாது. அவர்கள் நம் உரிமையை ஒத்துக்கொள்வதற்காக தங்கள் அதிகாரத்தை கொஞ்சம் விட்டுக்கொடுக்க நேரும்போது அவர்களிடம் நம் கோரிக்கைகளில் சிலவற்றை விட்டுக்கொடுக்க நாமும் முன்வரவேண்டும்.
காந்தியப்போராட்டத்தின் அடுத்த தளம் எங்கே நிர்ப்பந்தத்தை வழங்க வேண்டும் என்பது. ஒரு கருத்து ஒரு சமூகத்தில் ஒருபகுதியினரால் மட்டும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கையில் அத்தனை மக்களுக்கும் அதை கட்டாயமாக ஆக்கும்பொருட்டு ஒரு போராட்டத்தை காந்தி ஒருபோதும் ஆரம்பித்ததில்லை. அவரை பொறுத்தவரை பசுவதையும் மதுவிலக்கும் இரு கண்களைப்போல. ஆனால் அதற்காக அவர் உண்ணாவிரதம் இருந்ததில்லை.
இந்தியாவில் மதுவை முழுமையாக தடைசெய்ய வேண்டும் என்று கோரி ஒருவர் உண்ணாவிரதமிருந்து செத்தால் அது காந்திய போராட்டமா என்ன? அண்ணா ஹசாரே அப்படி ஒரு போராட்டத்தை ஆரம்பித்தால் அதை காந்திய போராட்டம் என்று சொல்லமுடியுமா? அவர் சாவார், அவ்வளவுதான். இன்று இங்கே பெரும்பாலானவர்கள் குடிப்பவர்கள். அவர்களிடம் குடிக்காதீர்கள் என்று கோரும் , அவர்களிடம் மனமாற்றத்தை உருவாக்க முயலும் ஒரு போராட்டத்தை மட்டுமே காந்தியம் முன்வைக்க முடியும்.
ஐரோம் ஷர்மிளாவுடன் மிகச் சரியாக ஒப்பிடப்படவேண்டிய போராட்டம் என்பது இங்கிலாந்தில் இருந்து அயர்லாந்தை பிரிப்பதற்காக ஐரிஷ் விடுதலை முன்னணி அரைநூற்றாண்டுக்காலம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக நிகழ்த்திய போர்தான்.ஐரிஷ் ரிப்பப்ளிகன் ஆர்மி [ஐஆர்ஏ] உலகின் மிகத்தீவிரமான விடுதலைராணுவங்களில் ஒன்று. ஈவிரக்கமில்லாத கொலைகளையும் குண்டு வெடிப்புகளையும் அது எழுபதுகள் வரைக்கூட செய்திருக்கிறது. 1800 கள் முதலே அயர்லாந்தும் இங்கிலாந்தும் போரிட்டு வந்தாலும் 1919 ல்தான் சரியான அயர்லாந்து விடுதலைப்போராட்டம் ஆரம்பித்தது
பற்பல தலைவர்கள் இறந்தனர். பலமுனைகளில் உள்நாட்டுப்போர் நிகழ்ந்தது. பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். இரண்டு வருட உள்நாட்டுப்போர் பிரிட்டிஷார் வென்றதுடன் நின்றது. ஆனால் மேலும் ஐம்பது வருடம் ஐஆர்ஏ தலைமறைவு இயக்கமாக பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடியது. அது செய்த தியாகங்கள் பல
அரசுகள் உணர்ச்சிகளுக்கு அஞ்சுவதில்லை. மக்கள் சக்திக்கு மட்டுமே அவை அஞ்சும்
அத்தகைய மக்கள் சக்தியை அரசுகள் அஞ்சும். அந்த போராட்டம் வெற்றியை அடையும். அதுதான் காந்தியப்போராட்டம். இங்கே ஏன் ஷர்மிளாவை அரசு பொருட்படுத்தவே இல்லை என்றால் அது ஒரு மக்கள்சக்தியாக ஆகவில்லை என்பதனால்தான்.
ஐரோம் ஷர்மிளா இந்திய அரசின் ராணுவத்தின் அராஜகங்களுக்கு எதிராக போராடுவது நியாயமானதே. ஆனால் அவர் காந்திய வழிகளை பின்தொடர்கிறார் என்றால் மக்களிடமிருந்து அவர்களுக்கு தேவையான தீர்வை கண்டடைய முயல்வேண்டும். அந்த தீர்வை நோக்கி மக்களைக் கொண்டுசெல்லக்கூடியதாக அவரது போராட்டம் இருக்கவேண்டும்
ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம் வெறும் மூர்க்கமான தியாகம் மட்டுமாகவே எஞ்சும்- ஐரீஷ் போராளிகளின் தற்கொலைகள் போல. வரலாற்றில் அது இரக்கமே இல்லாமல் மறக்கவும் படும். ஆனால் ஒரு காந்திய போராட்டத்திற்கு இல்லாத ஒருவகை நேரடியான தீவிரம் இதற்கு உள்ளது. வெறும் சாகச அரசியலை நாடும் இளைஞர்களை கவரும். வாய்ச்சால இதழாளர்களுக்கு ஆவேசமாக எழுத உதவும். அவ்வளவுதான்
ஐரோம் ஷர்மிளாவின் மகத்தான தியாகத்தை மீண்டும் வணங்குகிறேன். ஒரு பொதுநன்மைக்க்காக தன்னை முன்வைக்கும் எவரும் அறத்தின் மானுட வடிவங்களே. அந்த ஆவேசத்துடன் மக்களையும் வரலாற்றையும் புரிந்துகொள்ளும் அரசியல் விவேகமும் கலக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்
No comments:
Post a Comment