Monday, March 21, 2011

யோகம் , தியானம் ,பிரார்த்தனை

FROM:  யோகத்துக்கு ஒரு முன்னுரை    - http://www.jeyamohan.in/?p=763  FOR MORE  www.jeyamohan.in



பிரார்த்தனை என்பது கடவுள் என்ற கருத்தை ஏதேனும் வடிவில் ஏற்றுக் கொண்டவர்கள் அச்சக்தியிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பதாகும் 


தியானம் என்பது பிராத்தனையின் ஒரு நிலையாக கைகூடுவதாயினும் அதற்கு கடவுள் என்ற ஒருவர் இருந்தாக வேண்டிய அவசியமில்லை . நாத்திகர்களும் தியானம் செய்யலாம் .அடிப்படையில்  மனதை ஒருமை படுத்துதல்தான் தியானம் என்பது . முதலில் மனதை கூர்ந்து கவனித்தல் .  அதன் இயங்கு முறையை அறிந்து மெல்ல அதை கட்டுக்குள் கொண்டுவந்து  அதன் சிதறுண்ட இயக்கத்தை  சீரான வழியில் ஆற்றுப்படுத்துதல். தியானம் மனவல்லமையை அதிகரிக்கிறது .



ஆனால் யோகம் என்பது தியானத்தை விட மேலான ஒன்று . யோகத்தின் தொடக்கப்புள்ளி தியானமே. ஆனால் யோகம் மனம் என்ற செயல்பாட்டை அதற்கு நேர்  எதிர் திசைக்கு போய் இல்லாமலாக்க முயல்கிறது . தியானம் மனநதிக்கு கரைகட்டி சீராக ஓட செய்கிறது . யோகம் அந்நதியை திரும்ப அதன் உற்பத்தியிடத்துக்கே கொண்டு செல்ல முயல்கிறது . ஆகவே தியானம் எல்லாருக்கும் உரியது ,அவசியமானது . ஆனால் யோகம் அதன் பொருட்டு பிற அனைத்தையுமே விட்டு விட்டவர்களுக்கு மட்டுமே உரியது . வேறு செயல்களில் ஈடுபட்டபடி யோகத்தை செய்ய முடியாது . அறிவுப்பயிற்சிகூட யோகத்துக்கு தடையே .

தியானமே மதத்துடனும் கடவுளுடனும் பிரிக்கமுடியாத தொடர்பு உடையதல்ல என்றோம் .அப்படி இருக்க யோகம் மதத்துடனோ , கடவுளுடனோ தொடர்புடையது என்று சொல்ல வாய்ப்பே இல்லை .யோகம் முழுக்க முழுக்க உடல் , மனப்பயிற்சி மட்டுமே



யோகம் என்பது பொதுவாக மூன்று தளம் கொண்டது எனலாம். ஓன்று அனுஷ்டானம். யோகாசனம் போன்ற பயிற்சிகள், பிராணயாமம், உணவுக்கட்டுப்பாடுகள் போன்றவை இந்த தளம் சார்ந்தவை. இரண்டு, ஞானம். தத்துவப்பயிற்சி.  மூன்று, சாதனா. தியானம் இதைச் சேர்ந்தது. இந்தமூன்றும் சரியானபடி இணையும்போதே அது யோகம் ஆகிறது. அதன் முதல் நோக்கம் முழுமையான அகவிடுதலை அல்லது முக்தி.

No comments:

Post a Comment